
உலகச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரிப்பு
சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடித்து வரும் போர்ச் சூழல் காரணமாக, உலகச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (10) பாரிய அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
உலகளாவிய பதற்ற நிலை மற்றும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளுக்கு திரும்பியிருப்பதே (Safe-haven assets) இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, தங்கம் ஒரு அவுண்ஸ் 4,776.9 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளை, வெள்ளி ஒரு அவுண்ஸ் 75.36 அமெரிக்க டொலராக உயர்ந்து காணப்படுகிறது.

