பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரியவை நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்

பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரியவை நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்

37 ஆவது பொலிஸ்மா அதிபராக, தற்போதைய பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிக்க ஜனாதிபதி முன்வைத்த பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரசியலமைப்பு பேரவை, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று பிற்பகல் கூடியிருந்த நிலையில், இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் பதவிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து பொலிஸ்மா அதிபருக்கான பதவியில் வெற்றிடம் ஏற்பட்டது.

இதனையடுத்து பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பெயரை புதிய பொலிஸ்மா அதிபர் பதவிக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பரிந்துரைத்து அரசியலமைப்பு பேரவைக்கு அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )