அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை – பாகிஸ்தானில் சென்ரார் ஈரானிய வெளியுறவு அமைச்சர்

அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை – பாகிஸ்தானில் சென்ரார் ஈரானிய வெளியுறவு அமைச்சர்

எட்டு வாரங்களாக நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான முன்மொழிவுகளை விவாதிக்க ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி நேற்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் சென்றடைந்தார்.

ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்டு, உலகச் சந்தையில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் போரை நிறுத்துவதாவதற்கு அவரின் விஜயம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஈரான் ஒரு சலுகையை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

இருப்பினும், அந்த சலுகையின் விபரங்கள் இன்னும் தனக்குத் தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானிய அதிகாரிகள் அமெரிக்கப் பிரதிநிதிகளைச் சந்திக்கத் திட்டமிடவில்லை என்று ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப்பேச்சாளர் ‘X’ தளத்தில் தெரிவித்துள்ளார்.

ஈரானின் கவலைகள் மற்றும் கருத்துக்கள் பாகிஸ்தான் ஊடாகவே அமெரிக்காவிற்குத் தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அமெரிக்காவின் சிறப்புத் தூதுவர்களான ஸ்டீவ் விட்கோஃப் (Steve Witkoff) மற்றும் ஜாரெட் குஷ்னர் (Jared Kushner) ஆகியோர் பேச்சுவார்த்தைக்காக சனிக்கிழமை காலை பாகிஸ்தான் செல்லவுள்ளனர்.

அமெரிக்காவின் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் மற்றும் ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் காரணமாக இரு நாடுகளும் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளன.

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி முடக்கப்பட்டுள்ளதுடன், அமெரிக்காவில் பெற்றோல் விலை பல ஆண்டுகளில் இல்லாத உயர்வைக் கண்டுள்ளது.

அமெரிக்கத் தரப்பில் சாதகமான முன்னேற்றங்கள் காணப்படுவதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட் (Karoline Leavitt) நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தேவைப்பட்டால், இந்த மாத தொடக்கத்தில் தோல்வியுற்ற பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்த அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பாகிஸ்தான் செல்லத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இஸ்லாமாபாத் நகரின் மத்திய பகுதிகளில் பலத்த இராணுவப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் தளவாடக் குழு ஏற்கனவே அங்கு முகாமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )