தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் 32 புறாக்கள் திருட்டு

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் 32 புறாக்கள் திருட்டு

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருடப்பட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேசிய மிருகக்காட்சிசாலையின் உதவி பணிப்பாளர் எச்.ஏ.டி.பி. சமன்மாலி, தெஹிவளை பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டின் பிரகாரம்,  கடந்த 4 ஆம் திகதி அதிகாலையில் இந்தத் திருட்டு நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

காணாமல் போன புறாக்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )