நுவரெலியாவில் கடும் குளிர்

நுவரெலியாவில் கடும் குளிர்

நாட்டின் மிகக் குறைந்த வெப்பநிலையாக 7.4 பாகை செல்சியஸ் நுவரெலியா வானிலை ஆய்வு மையத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, பண்டாரவளை பிரதேசத்தில் இன்று அதிகாலை குறைந்தபட்ச வெப்பநிலையாக 11.5 பாகை செல்சியஸ் பதிவாகியுள்ளதாகவும், பதுளை பிரதேசத்தில் 15.2 பாகை செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும் அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மஹஇலுப்பல்லம பிரதேசத்தில் இன்று அதிகாலை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை 17.4 பாகை செல்சியஸாக காணப்பட்டதாகவும், அனுராதபுரம் பிரதேசத்தில் 18.6 பாகை செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )