எரிபொருள் நெருக்கடி ; எதிர்காலத்தில் மின்வெட்டுக்கு சாத்தியம்

எரிபொருள் நெருக்கடி ; எதிர்காலத்தில் மின்வெட்டுக்கு சாத்தியம்

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இதுவரை மின்வெட்டு அமல்படுத்தப்படவில்லை என்றாலும், எதிர்காலத்தில் மின்வெட்டு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக எரிசக்தி அமைச்சர் குமார் ஜெயகோடி தெரிவித்துள்ளார்.

தற்போது மின்சார விநியோகத்தை சீராகத் தக்கவைத்திருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இருப்பினும் எரிபொருள் பற்றாக்குறை நீடித்தால் மின்வெட்டு தவிர்க்க முடியாத நிலை உருவாகலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

நிலையை சமாளிக்க மாற்று நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )