
நாட்டின் நலன்களைப் பாதுகாப்பதற்காக எமது தூதுக்குழுவினர் துணிச்சலுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் -ஈரான் ஜனாதிபதியின் x பதிவு
பாகிஸ்தானில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள ஈரானிய தூதுக்குழுவினருக்கு ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.
நாட்டின் நலன்களைப் பாதுகாப்பதற்காக தூதுக்குழுவினர் “துணிச்சலுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
“எந்தச் சூழ்நிலையிலும், மக்களுக்கான எமது சேவை ஒரு கணம் கூட நிறுத்தப்பட மாட்டாது. பேச்சுவார்த்தைகளின் முடிவு எதுவாக இருந்தாலும், அரசாங்கம் எப்போதும் மக்களுடன் உறுதியாக நிற்கும்.”
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் எச்சரிக்கையான கருத்துக்களுக்கு மத்தியில், ஈரானிய ஜனாதிபதியின் இந்த அறிக்கை பேச்சுவார்த்தை மேசையில் ஈரானின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.

