
சீன பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ; 21 பேர் பலி
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள லியுயாங் பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் 21 பேர் உயிரிழந்ததுடன், 61 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பட்டாசு உற்பத்தியில் முக்கிய மையமாகக் கருதப்படும் இந்த பகுதியில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக, ஆலையின் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியதுடன், சுற்றுப்புறம் முழுவதும் அடர்ந்த புகை மூட்டம் சூழ்ந்தது.
விபத்து ஏற்பட்டதும் உடனடியாக மீட்புப்பணிகள் தொடங்கப்பட்டன. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES China

