வெளிநாட்டு வேலை மோசடி ; தம்பதியினர் கைது

வெளிநாட்டு வேலை மோசடி ; தம்பதியினர் கைது

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 2 கோடி ரூபாய் பண மோசடி செய்த இருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் (04) கைது செய்துள்ளனர்.

ஹங்குரன்கெத்த மற்றும் ரிக்கிலகஸ்கட பகுதிகளைச் சேர்ந்த தம்பதியினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ருமேனியா நாட்டில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தருவதாகக் கூறி, நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த ஆண், பெண் இருபாலாரிடமிருந்து மொத்தம் 213 இலட்ச ரூபாய் பணம் பெற்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் இக்கைது இடம்பெற்றுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர் பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச அரசியல்வாதி ஒருவர் எனவும், அவர் முன்னர் ருமேனியாவில் தொழிலில் ஈடுபட்டிருந்தவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )