தணிக்கை சேவை ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் இரகசியக்காப்பு சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்

தணிக்கை சேவை ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் இரகசியக்காப்பு சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்

கணக்காய்வு சேவை சேவை ஆணைக்குழுவின் (Audit Service Commission) புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட நால்வர், கடந்த மே 4ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் இரகசியக்காப்பு சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க.
முன்னாள் பிரதி கணக்காய்வாளர் நாயகம் ஜி. தேவஞானம்.
ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஹால் சுனில் ராஜபக்ச,ஓய்வுபெற்ற பொதுச் சேவை அதிகாரி ரத்ன தேசப்பிரிய.ஆகியோர் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் இரகசியக்காப்பு சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய தணிக்கைச் சட்டத்தின் 9 ஆம் பிரிவின்படி இந்த இரகசியக்காப்பு சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளப்பட்டது.

இந்தச் சட்டத்தின் கீழ், உறுப்பினர்கள் தங்கள் உத்தியோகபூர்வ கடமைகளைச் செய்யும்போது பெறப்படும், விவாதிக்கப்படும் அல்லது தெரிவிக்கப்படும் அனைத்துத் தகவல்களையும் மிகவும் இரகசியமாகப் பேணுவதாக உறுதியளிக்க வேண்டும்.

நீதிமன்றத்தின் உத்தரவு, நாடாளுமன்றத்தின் தேவை அல்லது எழுதப்பட்ட சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்ட சந்தர்ப்பங்கள் தவிர்ந்த ஏனைய எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இத்தகவல்களைப் பகிரங்கமாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ வெளிப்படுத்தக்கூடாது.

இந்த நிகழ்வில் தணிக்கை சேவை ஆணைக்குழுவின் தலைவரும் கணக்காய்வாளர் நாயகமுமான சமுதிகா ஜயரத்ன, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் பல உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )