
புதையல் தோண்டிய எழுவர் கைது
யாப்பஹுவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டியதாக சந்தேகிக்கப்படும் எழுவரை மஹவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று (18) இரவு மஹவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் மகுல்பொத்த, மஹவ, ரிதீபெந்திஎல்ல மற்றும் பலல்ல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
17 முதல் 51 வயதுக்கிடைப்பட்ட சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹவ பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

