யானை- மனித மோதலை குறைப்பதற்கு பிரஜைகள் பங்கேற்புடன் வேலைத்திட்டங்களை முன்னெடுங்கள்

யானை- மனித மோதலை குறைப்பதற்கு பிரஜைகள் பங்கேற்புடன் வேலைத்திட்டங்களை முன்னெடுங்கள்

காட்டு யானைகளுக்கு மாவட்ட எல்லைகள் இல்லை. கஹல்ல பல்லேகெலே பகுதியில் எழுந்துள்ள மனித-யானை மோதல் குருணாகல், புத்தளம், அனுராதபுரம் மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. நாடு முழுவதும் 70% யானைகள் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளுக்கு வெளியே வாழ்கின்றன என்பதால் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மாவட்ட மட்டத்தில் இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது சிறந்தது. துறைசார் புத்திஜீ நிபுணர்கள் குழுக்கள் முன்வைத்த தேசிய நில பயன்பாட்டுத் திட்டத்தின் அடிப்படையில் மக்கள் வாழும் பகுதிகளில் காட்டு யானைகள் இருப்பது தொடர்பாக தீர்வுகள் அவசியம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இலங்கை காலநிலை பற்றிய பாராளுமன்ற மன்றத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். இலங்கை காலநிலை பற்றிய பாராளுமன்ற மன்றத்தின் இணை தலைவர்களாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அவர்களும் பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) எல்.எம். அபேவிக்ரம அவர்களும் பணியாற்றுகின்றனர்.

எல் நினோ (El Niño) நிலை ஏற்பட்டால் இந்த பிரச்சினைகள் மேலும் அதிகரிக்கும்.

எல் நினோ நிலை ஏற்பட்டால் வறட்சி அதிகரிக்கும் போது மனித-யானை மோதல் மேலும் அதிகரிக்கும். பயிர்ச்செய்கை விளைச்சல்களிலும் சேதங்கள் அதிகரிக்கும். அவ்வாறே, விளைச்சலும் குறையும் என்பதால் இது ஒரு சுழற்சி நெருக்கடியாக மாறி காணப்படுகின்றன. இதற்கும் விரைவான தீர்வுத் திட்டங்கள் அவசியம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

காசிகோட்டே யானை சுரங்கப்பாதை பணிகளை விரைவுபடுத்துங்கள்.

காசிகோட்டே பகுதியில் ரயில் போக்குவரத்து பாதைக்கு கீழாக யானைகளுக்கான சுரங்கப்பாதை அமைக்கப்படுகின்றது. இங்கு ரயில்வே திணைக்களம் RDA யுடன் ஒருங்கிணைந்து செயற்படுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.

இம்மன்ற கூட்டத்தில் திலும் அலகியவன்ன, பேராசிரியர் பி.எஸ். சம்பத் சேனவிரத்ன, பேராசிரியர் இனோக குடவிதானகே, எஸ். விஜயமோகன், அஞ்சலி வாட்சன், Dr. Andrew Kittle, தீப்தி தேவிகா விக்ரமசிங்க, கலாநிதி யு.கே.ஜி. காலிங்க பத்மலால், பி. துஷ்யந்த் ரவீந்திர சில்வா, சாநக அரவிந்த களுபோவில உள்ளிட்ட துறை சார்ந்த நிபுணர்கள் பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )