
இலங்கைத் தமிழர்களுக்காக 772 புதிய வீடுகள்
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 729 வீடுகளை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (06) திறந்து வைத்துள்ளார்.
திருப்பூர், சேலம், தருமபுரி, விருதுநகர் ஆகிய இடங்களில் வீடுகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின்போது தழிழக அமைச்சர்கள், அரசு அதிகாரிகள்என பலர் கலந்துகொண்டனர்.

