பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு பெரும்பாலான இடங்களில் மழை

பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு பெரும்பாலான இடங்களில் மழை

இலங்கையைச் சூழ நிலவும் தாழமுக்கம் காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேல் , சபரகமுவ, மத்திய, ஊவா, வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ-க்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

காலை நேரத்திலும் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகாலை நேரங்களில் மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் மூடுபனி நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படும் உள்ளூர் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )