
யாழ் தேவி ரயில் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பம்
கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான “யாழ் தேவி” ரயில் சேவை இன்று (11) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் “யாழ் தேவி” ரயில் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை நோக்கிப் பயணிக்கவுள்ளது.
மேலும், செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குறித்த ரயில் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி இயக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

