
அசர்பைஜானில் கைது செய்யப்பட்டபட்டுவைத்தே சாமர நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்
அசர்பைஜானில் கைது செய்யப்பட்ட இலங்கையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான மனோஜ் சுரங்கா என்ற பட்டுவைத்தே சாமர நேற்றிரவு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.
நீண்ட காலமாக துபாயில் பதுங்கியிருந்த பின்னர், சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு அசர்பைஜானுக்குத் தப்பிச் சென்ற அவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர், ராகம, பட்டுவைத்த பகுதியைச் சேர்ந்த 48 வயதானவர் எனவும் துசித்த ஹல்லோலுவ மீதான தாக்குதல், கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு துப்பாக்கி வழங்கியது, அத்துடன் நாட்டில் நடைபெறும் போதைப்பொருள் விநியோகக் கும்பல் உள்ளிட்ட பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் இவர் முக்கிய சந்தேக நபர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
கட்டுநாயக்க விமான நிலையத்திற்குக் அழைத்து வரப்பட்ட பின்னர், சந்தேக நபர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்பு குற்றப்பிரிவுக்குக் அழைத்து செல்லப்பட்டார்.

