
தெனியாயவில் வேகமாக பரவும் வைரஸ் – 50 பேர் பாதிப்பு- பாதுகாப்பற்ற நீர் ஆதாரங்கள் கண்டுபிடிப்பு
தெனியாய நகரம் மற்றும் அங்குள்ள பாடசாலைகளுக்கு நீர் வழங்கும் நீர் ஆதாரங்கள் பாதுகாப்பற்றவை என அறிக்கையிடப்பட்டுள்ளது.
அங்கு பரவி வரும் வைரஸ் காய்ச்சல் குறித்து விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட விசேட வைத்தியர்கள் குழு இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் என்.ஜி.எஸ். பண்டாரத்ன தெரிவித்தார்.
இதற்கமைய, சம்பந்தப்பட்ட நீர் ஆதாரங்களுக்கு குளோரின் இடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்போது பரவி வரும் இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 50 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் டாக்டர் என்.ஜி.எஸ். பண்டாரத்ன மேலும் தெரிவித்தார்.

