
சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் முதலமைச்சர் விஜய்
17வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையா தலைமையில் தொடங்கியது.
இதன்போது, சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது.
அதில், முதலமைச்சர் விஜய் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
சட்டசபை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர்கள், புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

