5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலையை முன்னிட்டு, 5 மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று (11) இரவு 9.00 மணி வரை அமலில் இருக்கும் எனவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, கீழ்க்கண்ட மாவட்டங்களின் பிரதேச செயலகப் பிரிவுகள் மண்சரிவு அபாய எச்சரிக்கைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன:

பதுளை மாவட்டம் – பசறை
குருநாகல் மாவட்டம் – ரிதிகம
மாத்தளை மாவட்டம் – நாவுல, அம்பன்கங்க கோரளை, ரத்தோட்டை
மொனராகலை மாவட்டம் – படல்கும்புர, வெல்லவாய
இரத்தினபுரி மாவட்டம் – கொடகவெல

மேலும், முதலாம் கட்ட எச்சரிக்கை நிலையான “நிலை – 1” இன் கீழ் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கனமழை நீடிக்கும் பகுதிகளில் வாழும் மக்கள், நிலச்சரிவு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )