நயினாதீவு ரஜமஹா விகாரையில் 88 அடி உயர புத்த சிலை திறந்து வைப்பு

நயினாதீவு ரஜமஹா விகாரையில் 88 அடி உயர புத்த சிலை திறந்து வைப்பு

நயினாதீவு ரஜமஹா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 88 அடி உயரமுடைய புத்த சிலை இன்று (11) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வை முன்னிட்டு தென்னிலங்கையின் பல பகுதிகளிலிருந்து பெருமளவான பௌத்தர்கள் நயினாதீவுக்கு வருகை தந்திருந்தனர்.

பௌத்த சமய மரபுகளின்படி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டதுடன், பக்தர்கள் முதலில் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர். அதன் பின்னர், அங்கிருந்து ஊர்வலமாக ரஜமஹா விகாரைக்கு சென்று சமய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

மேலும், புதிதாக அமைக்கப்பட்ட புத்த சிலையின் திறப்பு நிகழ்விலும் பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளை மேற்கொண்டனர்.

இந்த நிகழ்வு நயினாதீவில் ஆன்மிக மற்றும் சமய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கருதப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )