3 நாட்களாக காணாமல் போயிருந்த நபர் வெல்லாவெளி வயல்வெளியில் சடலமாக மீட்பு

3 நாட்களாக காணாமல் போயிருந்த நபர் வெல்லாவெளி வயல்வெளியில் சடலமாக மீட்பு

வெல்லாவெளி, சின்னவத்தை பகுதியில் உள்ள வயல் காணி ஒன்றில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்து கிடப்பதாக வெல்லாவெளி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்த நபர் கடந்த மே மாதம் 08ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்தவர் என தெரியவந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் சின்னவத்தை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வெல்லாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )