
சனே தகைச்சி (Sanae Takaichi) , ஜப்பானின் முதல் பெண் பிரதமராக தெரிவாகும் சாத்தியம்
முன்னாள் அமைச்சர் சனே தகைச்சி (Sanae Takaichi) , ஜப்பானின் முதல் பெண் பிரதமராக தெரிவாகும் வாய்ப்புகள் உள்ளதாக சர்வதேச ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன .
ஜப்பான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன்னாள் பிரதமர் ஷிகெரு இஷிபா தலைமையிலான லிபரெல் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை இழந்தது
இதனையடுத்து இஷிபா தனது பிரதமர் பதவியை கடந்த மாதம் ராஜிநாமா செய்ததையடுத்து, அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணியில் அக்கட்சியினர் ஈடுபட்டுனர்.
முன்னாள் பொருளாதார பாதுகாப்பு அமைச்சர் சனே தகைச்சிக்கும் வேளாண் அமைச்சர் ஷிஞ்சிரோ கொய்ஜுமிக்கும் இடையிலான உள்கட்சி வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது சனே தகைச்சி வெற்றி பெற்றார் .
கட்சியின் 295 எம்.பி.க்கள் வாக்கெடுப்பில் பங்கேற்றனர்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமை , நிதி ஊழல் மோசடிகளால் அதிருப்தியடைந்த வாக்காளர்களின் நம்பிக்கையை மீண்டும் பெறும் சூழ்நிலை , அமெரிக்கா – ஜப்பான் நல்லுறவை மேம்படுத்துதல், வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புதல் , பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு நெருக்கடிகளுக்கான தீர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் பிரதமராக தெரிவாகுபவருக்கு உள்ள சவால்கள் என செயதிகள் சுட்டிக்காட்டுகின்றன.

