
பதுளை – ஹாலிஎல ரயில் பாதையை சீரமைப்பதற்கு இராணுவத்தினர் உதவி
பதுளைக்கும் – ஹாலிஎலவுக்கும் இடையிலான 179/60 மைல்கல்லுக்கு அருகிலுள்ள ரயில் பாதையில் நேற்று (01) ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ரயில் போக்குவரத்து தடைப்பட்டது.
நிலைமையை கருத்தில் கொண்டு உடனடியாக செயற்பட்ட, 2ஆவது இலங்கை ரைபில் படையணி படையினர், பாதிக்கப்பட்ட பகுதிக்கு விரைவாகச் சென்று தடைபட்ட பாதையை சீரமைப்பதற்கு உதவினர்.
அவர்கள் விரைந்து கழிவுகளை அகற்ற உதவியதுடன் இதனால் ரயில் நடவடிக்கைகள் விரைவில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.
CATEGORIES Sri Lanka