கடும் மழையால் 16 பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

கடும் மழையால் 16 பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 16 நீர்த்தேக்கங்களும் 10 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வான்பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் பொறியியலாளர் H.M.B.S.D. ஹேரத் தெரிவித்துள்ளார்.

ராஜாங்கனை நீர்த்தேக்கம், சொரபொர வெவ, வீரவில நீர்த்தேக்கம், லுணுகம்வெஹெர நீர்த்தேக்கம், வெஹெரகல நீர்த்தேக்கம், தெதுரு ஓயா நீர்த்தேக்கம், நாலந்தா நீர்த்தேக்கம் மற்றும் அலிகொட்ட ஆரா நீர்த்தேக்கம் உள்ளிட்ட பல நீர்த்தேக்கங்கள் இவ்வாறு வான்பாய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 12 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன, அவற்றின் ஊடாக வினாடிக்கு 18,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.

அதேவேளை, கிறிந்தி ஓயா வடிநிலப் பகுதியில் நிலவும் கடும் மழை காரணமாக, லுணுகம்வெஹெர, திஸ்ஸவாவி, வீரவில, யோதவாவி மற்றும் அலிகொட்டஆர நீர்த்தேக்கங்களும் வான்பாய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெஹெரகல நீர்த்தேக்கத்தின் நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டு, வினாடிக்கு 2,400 கன அடிக்கும் அதிகமான நீர் மாணிக்க கங்கைக்குள் வெளியேற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வான்பாயும் நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களில் அங்கமுவ, போபுருஎல்ல, மஹாசியம்பலாங்கமுவ, சத்தாதிஸ்ஸ, மாலிம்பொத்த மற்றும் மருதமடு ஆகிய நீர்த்தேக்கங்களும் அடங்குகின்றன.

தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால், வான்கதவுகள் ஊடாக வெளியேற்றப்படும் நீரின் அளவு அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால், நீர்த்தேக்கங்களை அன்மித்த பகுதிகளிலும் தாழ்நிலப் பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க நீர்ப்பாசனத் தினக்கலனம் அறிவுறுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )