இலஞ்ச ஆணைக்குழுவில் மஹிந்த ராஜபக்ஷ ஆஜர்

இலஞ்ச ஆணைக்குழுவில் மஹிந்த ராஜபக்ஷ ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அறிவிப்பின் பேரில் இன்று ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பான விசாரணைகளின் அடிப்படையிலேயே அவர் ஆஜரானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிவர்த்தனையில் இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலஞ்சமாகப் பெறப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், அண்மையில் காலமான கபில சந்திரசேனா மீது இலஞ்ச ஆணைக்குழு வழக்குப் பதிவு செய்துள்ளது.

முன்னதாக, கபில சந்திரசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மூன்று தடவைகளில் 60 மில்லியன் ரூபாய் வழங்கியதாகக் கூறியிருந்தார் என இலஞ்ச ஆணைய நீதிமன்றத்தில் அறிவித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைகளுக்காக வாக்குமூலம் வழங்குமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, தெற்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநரான வில்லி கமகே அவர்களும் நேற்று இலஞ்ச ஆணையத்திற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )