வெசாக் காலங்களில் லஞ்ச் ஷீட் உட்பட ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை விற்போருக்கு எதிராக கடுமையான சட்டங்கள்

வெசாக் காலங்களில் லஞ்ச் ஷீட் உட்பட ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை விற்போருக்கு எதிராக கடுமையான சட்டங்கள்

பொலித்தீன் லஞ்ச் ஷீட்கள் ,ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கோப்பைகள், தட்டுகள், கரண்டிகள் மற்றும் முட்கரண்டிகள்.பிளாஸ்டிக் மாலைகள் மற்றும் பிளாஸ்டிக் மெழுகு இலைகள்.பானங்கள் அருந்தப் பயன்படும் பிளாஸ்டிக் உறிஞ்சுகுழாய்கள் ,பாலித்தீன் மற்றும் பாலிப்ரோப்பிலீன் மூலம் தயாரிக்கப்பட்ட அலங்காரப் பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்யத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையின் தலைவர் திலக் ஹேவவசம் இது பற்றி கூறுகையில்,

”2017 செப்டம்பர் 1ஆம் திகதியிடப்பட்ட 2034/34 இலக்க வர்த்தமானி அறிவித்தல் மற்றும் 2023 ஜூலை 19ஆம் திகதியிடப்பட்ட 2341/30 இலக்க வர்த்தமானி ஆகியவற்றின் கீழ் இந்தத் தடைகள் விரிவாக்கப்பட்டுள்ளன. அரசியல், மதம் மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் இந்த விதிமுறைகளை மீறுவது தண்டனைக்குரிய குற்றமாகும்” என அவர் சுட்டிக்காட்டினார்.

பாலித்தீன் கழிவுகளை முறையாக அகற்றாததால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை எச்சரித்துள்ளது.

நீர்நிலைகள் மாசடைவதுடன் நீர்வாழ் உயிரினங்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது.

நுண்ணிய பிளாஸ்டிக்குகள் மனித மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்தைப் பாதிக்கின்றன.

பிளாஸ்டிக் கழிவுகளைத் திறந்தவெளியில் எரிப்பதன் மூலம் நச்சு வாயுக்கள் வளிமண்டலத்தில் கலக்கின்றன.

அனைத்து உயிரினங்கள் மீதும் கருணை காட்டுதல் மற்றும் பாதுகாத்தல் என்ற பௌத்த விழுமியங்களுக்கு இணங்க, வெசாக் கொண்டாட்டங்களின் போது சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்துங்கள் .மக்காத கழிவுகளைப் பொறுப்புடன் அகற்றுங்கள்.பிளாஸ்டிக் இல்லாத தூய்மையான வெசாக் பண்டிகையைக் கொண்டாடுங்கள் என அதிகாரசபை தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )