
DC படத்தின் டிரெய்லர் வெளியானது
மாநகரம், கைதி, விக்ரம், லியோ, கூலி ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக உயர்ந்தவர் லோகேஷ் கனகராஜ்.
இவர் தற்போது கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். ராக்கி, சாணி காயிதம், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஷ்வரன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ‘DC’ என பெயரிடப்பட்டுள்ளது.
2 வாரங்கள் முன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் DC படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
இப்படம் விரைவில் திரைக்கு வரும் என டிரெய்லரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Cinema

