பௌத்தாலோக வெசாக் வலயம் மே 30 முதல் ஜூன் 01 வரை

பௌத்தாலோக வெசாக் வலயம் மே 30 முதல் ஜூன் 01 வரை

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் பௌத்தாலோக வெசாக் குழுவின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (18) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இம்முறை, வெசாக் விழாவை முன்னிட்டு 25 ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்படும் பௌத்தாலோக வெசாக் வலயம், பௌத்தாலோக மாவத்தையை மையமாகக் கொண்டு மே மாதம் 30ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 01ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில், ஜனாதிபதி அலுவலகத்தின் தலையீட்டுடன் அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் இதனை மிக விமரிசையாக நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான பூர்வாங்க ஏற்பாடுகள் மற்றும் மக்களுக்கு வசதிகளை வழங்குவது குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

கொழும்பு மேயர் வ்ராய் கெலி பல்தசார், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, அகில இலங்கை பௌத்த மகா சபையின் தலைவர் சந்திரா நிமல் வாகிஷ்ட, உப தலைவர் ரொஷான் மத்துமகே, பொருளாளர் வசந்த டி சில்வா ஆகியோருடன் அரச நிறுவனங்களின் அதிகாரிகள், பாதுகாப்புப் பிரிவுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அனுசரணை வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2026.05.18

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )