
ஆவணச் சான்றளிப்புச் சேவைகள் மீண்டும் ஆரம்பம்
மின்னணு ஆவணச் சான்றளிப்பு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ஆவணச் சான்றளிப்புச் சேவைகள், தற்போது படிப்படியாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவில், சான்றளிப்புச் சேவைகள் வரையறுக்கப்பட்ட அளவில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
குறித்த மின்னணு அமைப்பை முழுமையாக மீட்டெடுப்பதற்கான பணிகள், தொழில்நுட்பக் குழுக்களுடன் இணைந்து தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு அமைச்சு வருத்தம் தெரிவித்துள்ளதுடன், மேலதிக தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

