
பயங்கரவாத நிதியுதவி தடுப்பு திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு இணங்குகிறது ; உயர் நீதிமன்றம் தீர்ப்பு
பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுக்கும் உடன்படிக்கை (திருத்த) சட்டமூலம், நாட்டின் அரசியலமைப்பிற்கு முழுமையாக இணங்கக்கூடிய வகையில் அமைந்துள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தத் தீர்மானத்தை சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (19) காலை பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அரசியலமைப்பின் 121 (1) ஆம் பிரிவின் கீழ் முன்வைக்கப்பட்ட சவாலொன்றைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.
மேலும், குறித்த சட்டமூலம் முழுமையாகவும், அதிலுள்ள ஒவ்வொரு விதிகளும் அரசியலமைப்பின் எந்தவொரு பிரிவிற்கும் முரணாக இல்லை என நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் தொடர்ந்து விவாதித்து நிறைவேற்றுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

