இலங்கை ரயில்வே சேவையை மேம்படுத்த ரஷ்யாவுடன் ஒப்பந்தம்

இலங்கை ரயில்வே சேவையை மேம்படுத்த ரஷ்யாவுடன் ஒப்பந்தம்

இலங்கையின் ரயில்வே சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இலங்கை மற்றும் ரஷ்யா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் கசான் (Kazan) நகரில் நடைபெற்ற 17ஆவது சர்வதேச பொருளாதார மாநாட்டில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி சபை முதல்வரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமானபிமல் ரத்நாயக்க கலந்து கொண்டார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், ரஷ்ய கூட்டாட்சியின் போக்குவரத்து அமைச்சும் இலங்கையின் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சும் இணைந்து, இலங்கையின் ரயில்வே போக்குவரத்து துறையின் அபிவிருத்திக்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கும் முதலீட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளன.

ஒப்பந்த கைச்சாத்து நிகழ்வில் ரஷ்ய கூட்டாட்சியின் போக்குவரத்து அமைச்சின் இராஜாங்க செயலாளரும் பிரதியமைச்சருமான Dmitry Zverev மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் பங்கேற்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )