வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம்

வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் ஏற்பட்ட வெள்ள நிலைமை சற்று தணிந்து வருவதை தொடர்ந்து எலிக் காய்ச்சல் பரவக்கூடும். இதனால் உடலில் காயங்கள்
இருப்பின் நீரில் இறங்க வேண்டாமென, சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமூக வைத்திய நிபுணர் உத்பலா அமரசிங்க அறிவுறுத்தினார்.

இந்நிலையில் எலி காய்ச்சலுக்கான அறிகுறி தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லுமாறும், அவர் தெரிவித்தார்.

எலிகளின் சிறுநீர் தண்ணீரில் கலப்பதால் காயங்கள் மூலம் எலி காய்ச்சல் கிருமி உடலில் உட்புகுந்து விடுமெனவும் இது மிகவும் ஆபத்தான நிலையெனவும், அவர் சுட்டிக்காட்டினார்.

கண்கள் சிவத்தல், காய்ச்சல், சிறுநீர் வெளியேறுதல் குறைதல், கடுமையான தலைவலி, தசைவலி ஆகிய அறிகுறிகள் எலி காய்ச்சலின் அறிகுறிகளெனத் தெரிவித்த வைத்திய நிபுணர், இந்த அறிகுறிகள் தொடர்ந்தால் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்வது மிகவும் அவசியமெனவும் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)