
அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று(20) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 294 ரூபாய் 92 சதமாக பதிவாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாய் 80 சதமாகக் காணப்பட்டது.
அத்துடன், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 304 ரூபாய் 59 சதமாக பதிவாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 305 ரூபாய் 15 சதமாக காணப்பட்டது.
CATEGORIES Business
TAGS dollar rate