வடக்கு ஆளுநர் -சிவஞானம் சிறீதரன் இடையில் சந்திப்பு

வடக்கு ஆளுநர் -சிவஞானம் சிறீதரன் இடையில் சந்திப்பு

வடக்கின் வெள்ளப் பேரிடர்ப் பாதிப்பு தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இன்றைய தினம் (29) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கான உடனடி உதவிகளை வழங்கல், காலநிலைத் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்வுக்குத் திரும்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்வதற்கான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)