தனது எக்ஸ் கணக்கை டி-ஆக்டிவேட் செய்த விக்னேஷ் சிவன்

தனது எக்ஸ் கணக்கை டி-ஆக்டிவேட் செய்த விக்னேஷ் சிவன்

சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நயன் தாராவில் ஆவண திரைப்படமான நயன்தாரா பியாண்ட் தி ஃபேரிடேல் என்ற திரைப்படம் வெளியானது. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த ஆவண திரைப்படத்தில் நானும் ரவுடி தான் திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சியை நீக்க கோரி தனுஷ் வழக்கை தொடர்ந்தார்.

அதற்கு சன்மானமாக 10 கோடி கேட்டது இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனாலும் அக்காட்சியை நீக்காமல் நெட்பிளிக்ஸ் – இல் வெளியிட்டனர்.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்பொழுது அவரது எக்ஸ் தள அக்கவுண்டை டீஆக்டிவேட் செய்துள்ளார். இதற்கான பின்னணி காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் வழக்கம் போல் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாகதான் உள்ளார்.

தனுஷ் மற்றும் நயன் தாரா இடையே உள்ள கருத்து வேறுபாடினால் இவர் இச்செயலை செய்துள்ளாரா என கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)