
CIDயில் இருந்து வெளியேறிய கதிர்காம பஸ்நாயக்க நிலமே
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளிப்பதற்காக ஆஜரான ருஹுணு கதிர்காம பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர, சற்றுமுன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைய இன்று காலை 11.00 மணியளவில் முன்னிலையாகி சுமார் 3 மணி நேரம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அங்கிருந்து வெளியேறிய போது ஊடங்களிடம் கருத்து தெரிவித்த அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக இருந்தபோது கிரிவெஹெரே சோரத தேரரால் கட்டிய வீடு குறித்து விசாரிக்க தன்னை அழைத்ததாக தெரிவித்தார்.
CATEGORIES Sri Lanka