
நீர்மின் உற்பத்தி அதிகரிப்பு
நாட்டின் நீர்மின் உற்பத்தி 2 மடங்காக அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக மின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினம் (27) பிரதான நீர்மின் உற்பத்தி நிலையங்களின் ஊடாக 15.66 கிகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இது மொத்த மின் உற்பத்தி விநியோகத்தின் 41.91 சதவீதம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. நீர்மின் விநியோகம் அதிகரித்துள்ளமையினால், அனல் மின் உற்பத்தி விநியோகம் 25 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
CATEGORIES Sri Lanka