
சாணக்கியன், சுமந்திரன் நோர்வே தூதுவருடன் கலந்துரையாடல்!
இந்தியாவுக்கும் இலங்கைக்குமான நோர்வே தூதுவர் H.E. மே-எலின் ஸ்டெனரை (H.E. May-Elin Stener) இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது, தமிழ் மக்கள் தொடர்பான பல முக்கிய விடயங்கள் மற்றும் சமகால அரசியல் குறித்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.