விரைவில் இஸ்ரேல்- காசா போர் நிறுத்தம் ?

விரைவில் இஸ்ரேல்- காசா போர் நிறுத்தம் ?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்ப் வருகிற திங்கட்கிழமை ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ளார். அதற்கு முன் வருகிற பேச்சுவார்த்தை வெற்றியடைந்து இஸ்ரேல்- காசா இடையில் போர் நிறுத்தம் ஏற்படும் எனவும், ஹமாஸ் 33 பிணைக்கைதிகளை விடுதலை செய்ய தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்திகதி நடத்திய தாக்குதலில் பிணைக்கைதியாக பிடிக்கப்பட்டவர்களில் இன்னும் 94 பேர் ஹமாஸ் மற்றும் அதன் கூட்டாளிகள் வசம் உள்ளனர். இதில் சுமார் 34 பேர் உயிரிழந்திருக்கலாம் என இஸ்ரேலால் நம்பப்படுகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்ப் “வருகிற 20-ந்திகதி ஜனாதிபதியாக பதவி ஏற்பதற்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடையும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)