
நல்லூரன் தெற்கு வாசல் வளைவு இன்று திறப்பு
வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருமையை மேலும் மெருகூட்டும் வகையில் ஆலயத்தின் தெற்கே கோவில் வீதியில் அமைக்கப்பட்ட அலங்கார தோரண வாசலான “நல்லூரன் தெற்கு வாசல் வளைவு” இன்று திறந்து வைக்கப்பட்டது.
கைலாசபிள்ளையார் ஆலயத்தில் இருந்து நெல்மணிகள் நிரப்பப்பட்ட பெட்டகத்தை பாரம்பரிய முறைப்படி மாட்டுவட்டியில் ஏற்றி கோவில் வீதிவழியாக் நல்லூரன் தெற்கு வாசல் வளைவினை அடைந்து தைப்பூச நன்நாளான இன்று தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நெல்மணிகள் நிரப்பபட்ட பெட்டகம் நல்லூர் ஆலயத்தினை அடைந்து ஆலயத்திற்குள் கொண்டு செல்லப்பட்டது.
யாழ்ப்பாணத்து கந்தபுராண கலாச்சாரத்தை எடுத்தியம்புவதாக மேற்படி வளைவு அமையப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரதீபன்



CATEGORIES Sri Lanka