
இஷாரா செவ்வந்தியின் தாயும், சகோதரரும் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை
கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தியின் தாயும், சகோதரரும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் இன்று பிரசன்னப்படுத்தப்பட்ட போது பொலிஸார் இந்த விடயத்தை நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாகத் தெரிவித்து இதுவரை 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
CATEGORIES Sri Lanka