புதிய நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய பாராளுமன்ற குழுவின் பரிந்துரை

புதிய நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய பாராளுமன்ற குழுவின் பரிந்துரை

புதிய தூதுவர் ஒருவர் மற்றும் உயர்ஸ்தானிகர் ஒருவரின் நியமனத்துக்கு நேற்றையதினம் (27) கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுவின் பரிந்துரை வழங்கப்பட்டது.

அதற்கமைய, அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக வை.கே.குணசேகரவின் பெயரை உயர் பதவிகள் பற்றிய குழு பரிந்துரைத்துள்ளது.

அத்துடன், பஹ்ரெய்ன் இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவராக திருமதி.எஸ்.எஸ்.திசாநாயக்கவின் பெயரும் உயர் பதவிகள் பற்றிய குழுவினால் பரிந்துரைக்கப்பட்டது.

பிரதமர் ஹரினி அமரசூரிய தலைமையில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுக் கூட்டத்தில், அமைச்சர்களான பிமல் ரத்னாயக்க, ஹினிதும சுனில் செனவி, குமார ஜயக்கொடி, பிரதியமைச்சர் ஹன்சக விஜேமுனி, பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் அபேசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)