
மக்களே எமக்கு முக்கியம்
எதிர்க்கட்சி என்ற வகையில், ஐக்கிய மக்கள் சக்திக்கு இந்நேரத்தில் உள்ள ஒரே சவால் மக்களை நன்றாக வாழ வைப்பதாகும்.
மக்களின் வாழ்க்கையை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். பேச்சாலும் செயலாலும் மக்களின் துன்பத்தைப் போக்க எம்மாலான சகல வழிகளிலும் முயற்சிப்போம்.
நடவடிக்கை எடுப்போம். செயல்படுவோம். அன்னிய நேரடி முதலீட்டைக் கொண்டு வந்து நாட்டை அபிவிருத்தியின் பால் இட்டுச் செல்ல வேண்டும்.
அரசாங்கமானது இதனையே ஆற்ற வேண்டும். இதற்கு பாரிய மூலோபாயத் திட்டமொன்று தேவை. அவ்வாறான திட்டம் இந்த அரசாங்கத்திடம் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.