
1600 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது
சுதுமலையில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது மானிப்பாய் பொலிசாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்த குணதிலகவின் வழிகாட்டுதலில் சுதுமலை பகுதிக்கு விரைந்த பொலிசார் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் இருவரை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.
இதன் பொழுது இருவகையினை சேர்ந்த 1600 போதை மாத்திரைகளை கைப்பற்றினர்.
தொடர்ந்து கொக்கோவில் பகுதியில் சேர்ந்த 21 மற்றும் 22 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்களை கைது செய்தனர்.
தொடர்ந்து இன்றைய தினம் (02) மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
பிரதீபன்
CATEGORIES Sri Lanka