14-வது முறையாக தந்தையான எலான் மஸ்க்

14-வது முறையாக தந்தையான எலான் மஸ்க்

உலக பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். இவர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தில் அரசாங்க திறன் துறை தலைவராக உள்ளார்.

எலான் மஸ்க் கடந்த 2000-ம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரான ஜஸ்டின் வில்சனை திருமணம் செய்து கொண்டார். அவர்களின் முதல் குழந்தை 10 வாரங்களிலேயே உயிரிழந்தது.

அதன்பின் இத்தம்பதிக்கு 5 குழந்தைகள் பிறந்தன. பின்னர் தொடர்ந்து பிரபல நடிகை ரிலேவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவருடன் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை.

அதன்பின் பாடகி கிரீம்சை திருமணம் செய்த எலான் மஸ்க், அவருடன் 3 குழந்தைகளை பெற்றுக் கொண்டார். 3 மனைவிகளையும் பிரிந்த அவர், ஷிவோன் ஷில்லீஸ் என்பவரை திருமணம் செய்து அவர் மூலம் 3 குழந்தைகளை பெற்றுக் கொண்டார்.

இதற்கிடையே சமீபத்தில் பெண் எழுத்தாளரான ஆஷ்லே செயின்ட் கிளேர் தனக்கு பிறந்த குழந்தைக்கு எலான் மஸ்க் தான் தந்தை என்று தெரிவித்தார். இந்த நிலையில் 14-வது குழந்தைக்கு எலான் மஸ்க் தந்தையாகி உள்ளார். தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஷிவோன் ஷில்லீஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் எங்கள் அற்புதமான மற்றும் நம்பமுடியாத மகன் செல்டன் லைகர்கஸைப் பற்றி நேரடியாகப் பகிர்ந்து கொள்வது நல்லது என்று நாங்கள் உணர்ந்தோம். அவரை மிகவும் நேசிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்த பதிவுக்கு எலான் மஸ்க் இதய வடிவ சின்னத்தை பதிவிட்டுள்ளார். எலான் மஸ்க்-ஷிவோன் ஷில்லீஸ் தம்பதிக்கு 4-வது குழந்தை எப்போது பிறந்தது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

image
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)