மகா கும்பமேளா ; காணாமல் போன 54,357 பேர் தங்கள் குடும்பங்களுடன் இணைந்தனர்

மகா கும்பமேளா ; காணாமல் போன 54,357 பேர் தங்கள் குடும்பங்களுடன் இணைந்தனர்

உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ம் திகதி தொடங்கியது.

45 நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்ச்சி அண்மையில் நிறைவடைந்தது. திரிவேணி சங்கமத்தில் 66 கோடிக்கும் அதிகமானோர் நீராடினர்.

இந்நிலையில், மகா கும்பமேளாவில் காணாமல் போன 54,357 பேர் தங்களது குடும்பங்களுடன் மீண்டு இணைந்துள்ளதாக உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

கும்பமேளாவில் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து அவர்களின் குடும்பத்துடன் சேர்க்க சிறப்பு நடவடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. காணாமல் போனவர்களில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)