
ஸஹர் மற்றும் இஃப்தார் என்பது என்ன ?
ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள், விடியலுக்கு முன்பு அதிகாலையிலேயே காலை உணவை உண்பர். இது, ஸஹர் என அறியப்படுகிறது.
அதன்பின், சூரியன் மறைந்ததும் மாலை நோன்பை முடிப்பதற்கு முன்பு வரை எதையும் உண்ண மாட்டார்கள், தண்ணீர் உட்பட எதையும் அருந்த மாட்டார்கள். இது இஃப்தார் எனப்படுகிறது.
இந்த இரண்டிற்கும் ஒரு குறிப்பிட்ட நேரம் உள்ளது. அதற்குள் ஸஹர் உணவை முடித்து, நோன்பைத் தொடங்க வேண்டும் மற்றும் மாலையில் இஃப்தார் உணவை உண்டு, நோன்பை முடிக்க வேண்டும். இஸ்லாமியர்கள் பலரும் இதை பாங்கு (தொழுகைக்கான அழைப்பு) நேரத்துடன் தொடர்புபடுத்திக் கொள்கிறார்கள்.
ரமலான் நோன்பின் போது நாள் முழுவதும் உடலுக்குத் தேவையான ஆற்றலையும் சத்துகளையும் பெற புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் அதிகம் உள்ள உணவுகளை ஸஹரில் உண்பது நல்லது என மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். போதிய அளவு தண்ணீர் அருந்துவதையும் உறுதி செய்ய வேண்டும்.
அதேபோல, இஃப்தாருக்கு முகமது நபி காலத்தில் இருந்தே நோன்பை முடிக்க பேரீட்சை சாப்பிடுவது பொதுவான தேர்வாக இருந்து வருகிறது. குடும்பத்துடன் வீடுகளில் அல்லது மசூதிகளில் ஒன்று கூடி, இஃப்தார் மூலம் நோன்பு திறப்பது ஒரு வழக்கமாக உள்ளது.