வடைக்குள் சட்டை ஊசி

வடைக்குள் சட்டை ஊசி

வவுனியாவில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் வாக்கப்பட்ட வடை ஒன்றிற்குள் சட்டை ஊசி ஒன்று காணப்பட்டுள்ளது.

வவுனியா, பழைய பஸ் நிலையம் முன்பாக உள்ள சைவ உணவகம் ஒன்றிற்கு நேற்று (03) சென்ற ஒருவர் அங்கு வடையினை கொள்வனவு செய்துள்ளார்.

குறித்த வடையை வீட்டில் சென்று சாப்பிட்டபோது அவ் வடைக்குள் பெரிய சட்டை ஊசி ஒன்று காணப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த வடையை அதன் முகாமையாளரிடம் காட்டி ஊசி காணப்பட்டமை தொடர்பில் தெரியப்படுததப்பட்டது.

தவறுதலாக இடம்பெற்றுள்ளதாகவும், இனிவரும் காலத்தில் இவ்வாறு நடைபெறாது எனவும் கூறி வடையை வாங்கியரிடம் சைவ உணவக முகாமையாளர் மன்னிப்பு கோரியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)