ஜெரோம் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு பயணிக்க அனுமதி

ஜெரோம் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு பயணிக்க அனுமதி

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையை முழுமையாக நீக்க கோட்டை நீதவான் நிலுபுலி இலங்காபுர உத்தரவிட்டுள்ளார்.

இனங்களுக்கு இடையே மத வெறுப்பைத் தூண்டும் வகையில் பிரசங்கம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த ஜெரோம் பெர்னாண்டோவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

வெளிநாடுகளில் நடைபெறும் மத நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்குத் தடையாக உள்ளதாகத் தெரிவித்து பயணத் தடையை நீக்க உத்தரவிடக் கோரி அவரது சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)