
சிவனொளிபாதமலையில் சட்டவிரோதமாக காட்டு மரங்கள் வெட்டிய இருவர் கைது
சிவனொளிபாதமலை தொடர் வனப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரங்கள் தரித்த இருவர் நல்லதண்ணி வனஜீவராசிகள் திணைக்கள ரத்நாயக்க மற்றும் அதிகாரிகள் நேற்று (04) சுற்றி வளைப்பின் போது கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தற்போது சிவனொளிபாதமலை பருவகாலம் என்பதால் சிறு சிறு வர்த்தக நிலையங்கள் அமைக்க சட்ட விரோதமான முறையில் மரங்கள் தரித்த நல்லதண்ணி பகுதியில் உள்ள இரண்டு சந்தேக நபர்களை கைது செய்து ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர் என நல்லதண்ணி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ரத்நாயக்க தெரிவித்தார்.
CATEGORIES Sri Lanka